Tuesday, September 5, 2017

அம்பேத்கரிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வரை - பிரமிள்

சமூக நீதிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூல் வரிசையில் ஒன்றான 'சாதி ஒழிப்பு' பக்கங்கள்-51, 52, 53ல், ஒரு அபூர்வமான பார்வைத் தீர்க்கம் (Focus of Vision) வெளிப்பட்டுள்ளது. ஒரு சமூக கட்டுமானத்தின் மதம் மற்றும் சம்பிரதாயங்கள், இதற்கு எதிராக மனோதர்மம் சார்ந்த பகுத்தறிவின்பாற்பட்ட சீர்திருத்த வடிவான புறநிலைச் சட்டதிட்டங்கள் இரண்டனுள் எதற்கு வலிமை அதிகம் என்ற பிரச்சனை பற்றியது இது. இந்த பிரச்னையின் பின்னணி, இந்திய சுதந்திரப் போராட்ட காலமாகும். ஆண்டு 1936, மோஹன்தாஸ் கே.காந்தியின் 'காந்தீய' இயக்கமும் அதைச் சார்ந்த காங்கிரஸும் இந்திய விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட காலம் அது.
Photo
தமது நகராண்மைக் கழகத் தலைமையையும் தமது சொத்துக்களையும் துறந்து இந்தக் காங்கிரஸை முழுமூச்சுடன் தென்னகத்தில் கட்டி எழுப்பிய ஈரோட்டின் ராமசாமி ஏற்கனவே காங்கிரஸைத் துறந்து தீவிர சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த சமயமும் அதுதான். புலமைமிக்க அம்பேத்கரும் பள்ளிக்கூடத்தைவிட்டு இளமையிலேயே வெளியேறிய ஈ.வே.ரா. வும் ஒரு விஷயத்தில் இந்தப் பார்வை தீர்க்கத்தை தமது இயக்கங்கள் மூலம் வெளியிட்டனர். அது இதுதான்: இந்தியா வெள்ளையரிடமிருந்து பெறக்கூடிய சுதந்திரம் இரண்டாம்பட்சமானது. முதன்மையாக, இந்தியா பெறவேண்டியது ஜாதி ஒழிப்பைத்தான். இன்றேல் சுதந்திரம் பெற்ற பின்பு நடக்கப்போகும் சுயராஜ்யம், உண்மையில் ஏற்கனவே இந்தியச் சமூக கட்டுமானத்துக்குள் அமைந்துள்ள ஜாதீய எதேச்சதிகாரங்களின் ராஜ்யமாகவே அமையும். கீழ்ஜாதியினராகவும், தாழ்த்தப்பட்டோராகவும், தீண்டத்தகாதவராகவும் இந்திய சமூக அமைப்பில் ஏற்கனவே அமைந்திருந்தவர்களுக்கு விமோசனம் கிடைக்காது என்பதே இவ்விருவரின் முடிவாகும்.

'அதிர்ஷ்டவசமாக' கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டு ஒரு கம்யூனிச ஆட்சி வந்தால்கூட 'சாதி அரக்கன் வழிமறிப்பான்' என்றார் அம்பேத்கர். மிகமிகத் தீர்க்கமான விஞ்ஞானப் பூர்வமான கூற்று. இந்தக் கூற்று ஒன்றே அம்பேத்கர் எவ்விதமான மாயரூபமான லட்சியவாத பிதற்றலினாலும் ஏமாற்றப்படமுடியாத சமூக விஞ்ஞானி என்பதைக் காட்டுவதாகும். இதை அவர் 1936 யிலேயே கூறியமை கவனத்துக்குரியது.

நான் மேலே குறிப்பிட்டுள்ள நூலில் அந்தப் பக்கங்களில் அம்பேத்கர். இதற்கு ஒரு உதாரணத்தை சரித்திரத்திலிருந்து எடுத்துத்தருகிறார். பழைய ரோமின் குடியரசு (ரிபப்ளிக்) மேல்கட்டுமானத்து பித்ருவர்க்கம் (Patricians) (இங்கே Patricians க்கு நான்தரும் பதம் நூலில் இல்லை. மூலப்பதத்தையும் மொழிபெயர்ப்பையும் சேர்த்துத் தருவது பயனுள்ளது. இந்த நூலில் 179 வது பக்கம் வரி 9 ல் 'ஏகநாதர்' என்பது 'ஏசுநாதர்' என்று அச்சாகி உள்ளது.) கீழ்கட்டுமானத்து பாமரர் (Plebeians) என்ற இருவரையும் பற்றிய சரித்திர விபரம் இது.

பித்ருவர்க்கத்தினர், பாமரவர்க்கத்தினர் இருவரின் பிரதிநிதிகளையும் வர்க்கத்துக்கு ஒரு பிரதிநிதி என்றபடி தேர்வுசெய்தபோது இருவருமே பித்ரு வர்க்கத்திலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பாமரர்களின் நலன்கள் கவனிக்கப்படவில்லை. இதை உணர்ந்து நடத்தப்பட்ட இயக்கங்களின் விளைவாக அந்தந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே பிரதிநிதியாகலாம் என்று சட்டம் சீர்திருத்தப்பட்டது. அப்போது கூட, பாமரர்களிடையே இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி, பாமரர்களுக்கு விரோதமாகவும் பித்ருக்களுக்கு சாதகமாக்கவும்தான் செயல்பட்டான். காரணம், அவ்விதமாக மட்டுமே செயல்படக்கூடிய பாமர வர்க்கப் பிரதிநிதியைத்தான் ரோமர்கள் வழிபட்ட டெல்ஃபி கடவுளின் ஆவேசக்காரர்கள் (Oracles) சிபாரிசு செய்தனர்.

தங்கள் வாழ்வு நலனுக்காக இயக்கம் நடத்திப் பெற்ற சட்டமும் மத சம்பிரதாயமும் இங்கே முரண்படுவதை பாமர வர்க்கத்தினார் கண்டனார். இருந்தும் கூட மத சம்பிரதாயமே அவார்களது மனதில் முக்கிமாயிற்று. இதன் விளைவாக ஆவேசக்காரர்களின் முடிவையே அவர்கள் ஏற்றனர். யார் அந்த ஆவேசக்காரர் அவர் ஒரு பித்ருவர்க்கக்கார் அவரே ஆவேசக்காரராக முடியும்! மத சம்பிரதாயத்தின் மேல் கட்டுமானக் குணத்தினால் பாதிக்கப்பட்டும் கூட மதத்தை அனுசரிப்பதாக நம்பியபடி மேல்கட்டுமானத்தில் எதேச்சாதிகாரத்துக்கே ரோமின் குடியரசு பலியாயிற்று.
Photo
இந்திய உபகண்டத்தை நோக்கி அம்பேத்கர்; விடுவித்த அபார பார்வைத் தீர்க்கம் கொண்ட எச்சரிக்கை இந்தச் சரித்திர செய்தியில் ஊடாடுகிறது. ஏதேச்சாதிகார கட்டமைப்பையே தனது சமூகக் கட்டமைப்பாகக் கொண்டிருக்கும் ஹிந்துத்துவம் - இந்து மதம் - இதனால் அம்பேத்கரின் தீவிர தாக்குதலுக்கு இலக்காயிற்று ஈ.வெ.ராமசாமியும் தென்னக்த்தில் இதே காரணத்திற்காக பார்ப்பனியத்தைத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் ஒரு மூலாதார சுலோகமாக அவரிடமிருந்து பிறந்த கூற்றுத்தான் ‘கடவுள் இல்லை’. இதே போல் நாஸ்திக அணுகுமுறையான பௌத்தத்தை அநுசரித்தவர் அம்பேத்கர். தீண்டத்தகாதவர்களின் சரித்திரம் பற்றிய நூலில், அவர்கள் பௌத்தர்களாக இருந்து அதைக் கைவிடாமையாலேயே பிராமணீய மேலாதிக்க வாதத்தினால் புத்தம் அழிக்கப்பட்ட பின்பு தீண்டத்தகாதோராக்கப்பட்டனர்; என்கிறர்;அம்பேத்கர்; இருக்கலாம்தான் என்று முன்றில் பாணியில் இதைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இருக்கா இல்லையா என்பதை நிச்சயிப்பதற்குரிய ஆதாரமில்லாத நிலையில் அம்பேத்கர் முன்வைத்த சரித்திர ஊகம் இது. (இந்த ஊகம் தவறானது என்று என்னிடம் நேரில்விளக்கியிருக்கிறார் பிரமிள். சண்டாளர்கள் போன்றோரை புத்தரும் அவரது சீடர்களும் சந்திக்கும் கதைகளும், அவர்களில் சிலர் புத்தரால் பின்பு சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப்பட்ட நிகழ்வுகளும், புத்தருக்கு முன்பே சண்டாளர்கள் போன்றர் இருந்ததை நிரூபிக்கின்றன. எனவே புத்த மதம் அழிக்கப்பட்ட பின்பு அதை கைவிட்டமையால் தீண்டத்தகாதோராக்கப்பட்டனர் என்ற அம்பேத்கர் கூற்றே மிகையானது என்று கூறியிருக்கிறர் பிரமிள் இதையும் வேறு சில ஆதாரங்களையும் கட்டுரையில் எழுதிச் சேர்க்க வேண்டுமென்ற அவரது எண்ணம் நிறைவடையவில்லை. - கால.சுப்ரமணியம்)

பார்க்கப்போனால் கடவுள் இல்லை என்ற கூற்று ‘ஒன்பது நவக்கிரகம்’ என்பது போன்ற ஒன்றுதான். ஏனெனில் ‘கடவுள்’ என்ற பதமே நாஸ்திகப் பண்புள்ளது. கட+உள் ‘எது உள்ளதாகத் தென்படுகின்றதோ அதைக் கட’ என்பது ஒரு பொருள். ‘ உனக்கு எது முற்று முடிபானதாகத் தோன்றுகிறதோ அதைக் கடந்திரு’ என்று இன்னொரு தளத்தில் இது பொருள்படும். பார்க்கப்போனால் உலகில்; எந்த மரபிலுமே இதற்கு இணையான ஒரு செயல்வடிவான பிரயோம் இல்லை. சமஸ்கிருதத்திலிருந்து கிடைப்பது கிரேக்க, லத்தீன் தொடர்புள்ள ‘தெய்வம்’ என்பது மட்டுமே. இது முற்றிலும் மனிதப் பிரதிமை (Anthropomorphic) குணம் கொண்ட பிரயோகம். ‘கடவுள்’ என்பது ‘கட’ என்ற ஒரு மனோநிலைச் செயலைத் தூண்டும் பிரயோகமாகும். இதை இல்லை என்று சொல்வது தத்துவர்த்தமாக அபத்தமானது. ஈ.வெ.ரா. ‘தெய்வம் இல்லை’ என்று சொல்லியிருந்தால்தான் சரி என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
Photo
எப்படியும் நாம் ஈ.வெ.ராவின் இயக்கத்தைப் பற்றிப் பேசும்போது தாழ்ந்து பேசுவதே அவரது பர்வையின் ஊற்றை உணர்வதாகும். உண்மையில் ‘கடவுள்’ என்ற சொல்லை ஆராய்கிற வேலையை விட்டு நம்பிக்கை (Faith) என்ற மனோநிலையினையே ஈ.வெ.ரா தாக்கினர் என்பதாகத்தான் அவரது மூலாதார சுலோகத்தைக் காணவேண்டும். அவரது நோக்கம் பகுத்தறிவு (Reason) என்ற மனோவிழிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சமூகம் தான். இந்திய வரலாற்றில் நவீன திருப்புமுனையாகவே நம்பிக்கைக்கு எதிராக இந்த பகுத்தறிவின் விழிப்புநிலை மீண்டும் எழுப்பப்பட்டது. அம்பேத்கர் கண்ட பௌத்தமும் நம்பிக்கை என்ற குருட்டுத்தடவலை நிராகரித்த பகுத்தறிவின் விழிப்புநிலைதான். ஈ.வெ.ரா சரியான ஒரு வாழ்க்கை நோக்காகக் கண்டது எதை? ‘ஞானிக்கும் சித்தனுக்கும் கோவில் இல்லை’ என்ற அவரது கூற்று ஒன்று இதற்கு பதிலிருக்கிறது. இதுவே பௌத்தத்தின் அணுகுமுறையுமாகும். பார்க்கப்போனால் தென்னகத்தில் வெடித்துப் பரவிய பதினெண் சித்தர்கள் ‘வள்ளலார்’ என்ற சிதம்பரம் ராமலிங்கம், மற்றும் அங்கங்கே தோன்றிச் சரித்திரப் பதிவுகளை தாண்டி மறைந்த ஞானிகள்வரை உள்ளூர இந்த பௌத்த விழிப்பு நிலையாளர்கள்தாம். இவர்களுள், நமது காலம்வரை வாழ்ந்து மறைந்த திருக்கோணமலை சாது அப்பாத்துரை தந்திருக்கும் தியானதாரா, திருமூலரின் திருமந்திரம் என்ற நூலுடன் ஒப்பிடத்தக்கது. அதேசமயத்தில் இவ்விரு நூல்களும் செயல்முறை தளத்தில் புத்தரின் விழிப்புநிலைக் கொள்கைகளான சதிபதனம், விபஸ்ஸனம் ஆகியற்றைப் பிரதிபலிக்கின்றன இவர்கள் தங்கள் அடிப்படைச் செய்தியாக நம்பிக்கைகளை நிராகரித்து மனிதன் எல்லாவகை இயக்கங்களையும் கேள்விகளையும் கேள்விகள் கொண்டு பார்க்கத் தூண்டுகிறவர்கள். இந்த அணுகுமுறையின் மிகப்பரந்து ஆழ்ந்த நவீன வடிவமே ஜே.கிருஷ்ணமூர்த்தியுடையதும்.

ஈ.வெ. ரா., ஜே. கிருஷ்ணமூர்தியைச் சந்தித்தவர் இதன் விபரத்தை ‘மீறல்’ 4 பிரமிள் சிறப்பிதழ் பேட்டியில் தந்தித்திருக்கிறேன். இந்த விபரத்தின் தாத்பரியத்தை இந்திய அறிவு இயக்கம் கண்டுகொள்வது மிக மிக அவசியமாகும். ஈ.வெ.ரா வில் அணுகுமுறையில் இருந்த வெறுப்பையும் வன்முறைத் தன்மையையும் ஜே. கி நிராகரித்தார். பௌத்தம் சித்தர் இயக்கம், வள்ளலாரிலிருந்து அப்பாத்துரைவரை நான் மேலே குறிப்பிட்ட ஒரு தொடர் நிலையான விழிப்பு நிலையாளர்கள் யாவரிடமும் செயல்பட்டது வெறுப்பு வன்முறை இரண்டையும் நிராகரிக்கும் பார்வைதான். இவற்றை மனோ நிலத்திலிருந்து அறுத்து எடுத்துவிட முடியாது ஏனெனில் இவை ஒரே செடியின் கிளைகள். செடியின் வேர், அச்சம். தியான மார்க்கக்காரரின் முடிவான கடன் இந்த அச்சத்தைத் தனது மனசிலிருந்து கல்லி எறிவதுதான். அச்சத்தின் வேரிலிருந்து எழும் செடி நம்பிக்கை அச்சமின்றேல் நம்பிக்கயில்லை கூடவே வெறுப்புமில்லை வன்முறையுமில்லை.

சீர்திருத்த இயக்கம் எதுவும் இத்தகைய மனோவியல் மார்க்கமல்ல அது அச்சம் எங்கிற மூலக்கூறுபற்றி உணர்ந்து செயல்படுவதில்லை மிகமிக அபூர்வமான தனிமனிதர்களை தவிர்த்த பெரும்பாலோர் எத்தகைய திரணிகளாக இருந்தாலும் அச்சத்திலிருந்து விளையும் நம்பிக்கைகளைத்தான் கொண்டிருக்கின்றனர். இவைகள் ஒருபுறம் தெய்வ நம்பிக்கைகள் ஆகலாம் மறுபுறம் ஏதாவது எதிர்கால பூலோக சொர்க்கமாகலாம். ஆக அச்சம் என்ற வேரிலிருந்து எழும் நம்பிக்கையின் கிளைகளே விருப்பு வெறுப்பும் வன்முறையும். இதனால் சீர்திருத்தம், அதாவது புரட்சி என்பது, உண்மையில், விருப்பு வெறுப்பு, வன்முறை, நம்பிக்கை, அச்சம் என்ற ஒட்டுமொத்த விவகார தத்துவத்தை ஒரே வீச்சில் களைவதாக இருக்கவேண்டும். ஈ.வெ.ரா இதைப் புரிந்து கொள்ள ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் அவரது சந்திப்பு உதவியுருக்கிறது. மிகச் சிறுபான்மையினரான தமிழகத்துப் பார்ப்பனர்களை ஒரு உள்நாட்டு போர் நிலையிலிருந்து காப்பாற்றியது இந்த தத்துவார்த்த நுட்பத்தை ஈ.வெ.ரா. புரிந்துகொண்டமைதான். இதை இவ்வளவு விவரமாக அல்லாமல் வெறும் தகவலாக மட்டுமே ‘மீறல்’ லில் தந்திருக்கிறேன். இங்கே என் போக்கில் இதன் நுண்ணிய அம்சங்களைத் தருவித்துள்ளேன்.
Photo
ஆக இந்தக் கட்டுரையில் ஆரம்பப் பகுதியில் எழுப்பப்பட்ட பிரச்சனை இங்கே வேறொரு பரிமாணத்துக்கு செல்லக் காணலாம். மத சம்பிரதாயங்கள் ஒருபுறமாகவும் சீர்திருத்த ரீதியான சட்டங்கள் மறுபுறமும் நிற்கிற சமூகத்தின் வெளிக் கட்டுமானப் பிரச்சனை இங்கே அச்சம் என்ற அகமுகப் பிரச்சனையைப் பேணுவதா, நீங்குவதா என்ற கேள்வியாகிறது. அதாவது சீர்திருத்தரீதியான சட்டம் எதுவும் இந்த அச்சத்தினால் விளைந்த சம்பிரதாயங்களுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாது. ரோமக் குடியரசின் வீழ்ச்சிக்குக் காரணம் மதம் சார்ந்த டெல்பியின் ஆவேச சம்பிரதாயத்தை ரோமின் பாமர வர்க்கத்தினர் எதிர்க்கவோ துறக்கவோ முடியாமைதான். இதன் காரணம் அவர்களது அச்சமும் அதன் விளைவான நம்பிக்கையுமாகும். இதனால்தான் இந்த அச்சத்தைக் கலையாமல் உண்மையான புரட்சி எந்தத் தளத்திலும் ஏற்படாது. இதை எல்லா உள்ளங்களும் சாதிக்க முடியுமா என்பது ஒரு தீவிரமான மனம் கொண்டவனுக்கு ஒரு பிரச்சனையாகாது. அவன் தனது உள்ளத்திலிருந்து இந்த அச்சத்தை நீக்கும் பணியில் ஆரம்பித்து அதே பணியை பிறர் மத்தியிலும் செய்யவே முன்னிற்பான். அவனே உண்மையான மானுடன். மற்றயவர்கள் பார்பனர், வெள்ளாளர் முதலிய ஜாதி இந்துக்கள், தலித்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், புத்தர்கள், திராவிடர்கள், மார்க்சீயர்கள், எக்ஸட்ராக்கள்.

இன்று ஆண்மயாத்திரை சம்பந்தப்பட்டுவிட்டாலே அதை இந்து வக்கிரங்களுடன் முடிச்சுப்போட்டு விடும் போக்கு ஒன்று கிளம்பியிருக்கிறது. இதன் காரணம் ஆன்மீகத்தைத் தங்கள் வக்கிரங்களுக்கு உரிய ஒரே நியாயமாக வைதீகப் பிண்டங்கள் பாராட்டுவதுதான்.

ஆன்ம யாத்திரையும் வைதீகப் போக்கும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்று கொள்வோம். அப்படிக் கொள்ளும்போது எந்த அடிப்படையில் இவை ஒன்று? வைதீகத்தின் சமூக வக்கிரமே ஆன்மீகத்திலும் உண்டு என்ற அடிப்படையிலா? அல்லது ஆன்மீகத்தின் கருணையே வைதீகத்திலும் உண்டு என்ற அடிப்படையிலா? இந்தக் கேள்விகளே பதிலைத் தந்துவிடுவான பார்க்கப்போனால் இந்தக் கட்டுரையின் முதல்பகுதிக்கே நாம் இவ்விடத்தில் திரும்புகிறோம் என உணரலாம்.

அம்பேத்கரும் காந்தியும் இந்த விஷயத்தில் முரண்பட்டிருக்கிறார்கள் ‘சாதி ஒழிப்பு’ நூலில், இந்த முரண்பாடு பதிவுபெற்றுள்ளது. நூலுக்கு பதிலாக காந்தி ஒரு கட்டுரையயை தமது ‘ஹரிஜன்’ னில் எழுதினார்.அதில் அவர் அம்பேத்கரின் கசப்பைச் சுட்டுக்காட்டியுள்ளார் அம்பேத்கர் தரும் பதிலில் இது தொடப்படாவிட்டாலும் இது கவனத்துக்குரியாது. ஹிந்துத்துவக் கட்டுமானத்துக்குள்ளேயே நின்று ஜாதி முதலிய வக்கிரங்களை மீறி நிலவிய ஞானிகளின் பட்டியில் ஒன்றை காந்தி தனது பதிலில் தந்திருக்கிறார். அம்பேத்கர் இந்தப் பட்டியலில் ராமானுஜரையும், கபீர்தாசையும் தவிர்த்து இதர ஞாநிகளுள் பெரும்பாலோர் ஜாதீயவாதிகளாகவே வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். இது அம்பேத்கரின் சமூகவியல் கண்ணோட்டத்தில் மிகச்சரியானது. இதுபற்றி கீழே விவாதிப்போம். அம்பேத்கர் காந்தி சர்ச்சையில் காந்தியார் மண்ணைக் கவ்வுகிறார். இது காந்தியின் மீது அவரது எளிமையின் மீது நமக்கு அனுதாபத்தையே வரவழைக்கிறது. அவர் மண்ணைக் கவ்வுவது ஜாதீயம், வர்ணாசிரமம் என்ற இரண்டையும் பற்றிய விஷயத்தில் ஆகும். காந்தியின் பதில் இவ்விஷயத்தில் தவறானது. ஜாதீயம் என்பது இனக்குழுவழக்கில் விளைந்த கட்டுக்கோப்பு. இது தொழில் அடிப்படையிலான பிரிவாகவும் வடிவெடுக்கிறது. இதில் பிறப்பின் வரையறை இதில் பிறப்பின் வரையறை பிரதானமாகும். வர்ணம் என்பதன் மூலவடிவில், அவரவர் சுபாவத்துக்கு ஏற்றபடி தொழிலை மேற்கொள்ளுதலே குறிப்பிடப்படுகிறது. இங்கே சுபாவம்தான் தொழிலை வரையறுக்கிறது. பிறப்பு அல்ல.
Photo
ஜாதி என்றால் ‘பிறப்பு’ என்றும் வர்ணம் என்றால் ‘தேர்வு’ என்றும் பொருள்படும். சுபாவமே தேர்வின் காரணி.
(‘மீறல் பேட்டி’யில் வால்மீகிக்கு நாரதர் ‘மரா மரா’ மந்திரத்தை தந்ததன் அடிப்படையாக, வர்ணத்துக்கு ஒளியுடலின் வர்ணம் என்று பொருள்தந்து, அந்த அடிப்படையில் ஆன்மீக வாழ்வுக்காக ஒருவன் ‘தேர்வு’ செய்யப்படுவதைக் கூறியுள்ளேன். இது என் பார்வை.)
காந்தி, சாதீயத்தின் பிறப்புரீதியான தொழில் பிறவை அநுசரித்தபடியே, அதுதான் வர்ணாசிரமம் என்று கூறுகிறார். அது நியாயமானது என்கிறார். மேலே தரப்பட்டுள்ள தெளிவை அம்பேத்கர் முன்வைத்து காந்தியின் தவறை சுட்டிக்காட்டியதுடன், பார்க்கப்போனால் அவரவர் சுபாவத்துக்கு ஏற்ற தொழில் முறையைக் குறிப்பிடும் வர்ணாசிரமத்தின் மூலவடிவம் உண்மையில் சரியானது (நவீனமானது என்றும் கொள்ளவேண்டும்) என்கிறார். இதையடுத்து பிறப்பினாலேயே தொழிலை நிர்ணயிக்கும் இனக்குழுவாத வக்கிரத்தை வர்ணாசிரமம் என்று காந்தி உயர்த்திப் பிடிப்பதை அம்பேத்கர் தீவிரமாகஸ் சாடுகிறார். அத்துடன், அவருடைய காலகட்டத்திலேயே செருப்புகடை வைத்திருக்கும் பார்ப்பனர்களைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பின் அடிப்படையில் காந்தி ஒரு வியாபாரி, அனால் அவரது தொழில் எப்போதுமே வியாபாரமாக இருந்ததில்லை என்கிறார்.

இங்கே நாம், அதுவும் இன்றைய காலகட்டத்தில் எங்கே நிற்கிறோம்? தொழில் ரீதியாக இன்று ஜாதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அனால் விசேஷமாக திருமண உறவுகள், உயர்சாதிப் புள்ளிகளின் பகிரங்கப் பவிசுகள் போன்ற அன்றாடத் தன்மைகள், கலை, அரசியல், அதன்வழி கிடைக்கும் லாபங்கள் இவற்றில் ஜாதீயம் மிகத் தீவிரமாகச் செயல்படுகிறது. பறையர் ஒருவர் இஞ்சினீயராவதை இன்று தடுக்க முடியாது இருந்தும் அவர் தீண்டத்தகாதவர். உடுமலைப்பேட்டைக்கருகிலுள்ள திருமூர்த்திமலை சார்ந்த கிராமம் ஒன்றில் இப்படி ஒரு இஞ்சினியர் தமக்கென ஒரு கல்வீடு கட்ட முயன்றபோது ஜாதி ஹிந்துக்களால் தடுக்கப்பட்டு, அவர் குடிசையிலேயே வாழவேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். இளையராஜா என்ற பறையர் செய்த மேனாட்டு சிம்ஃபனி சாதனைக்காக, ‘ஊடகம்’ என்ற சிறுபத்திரிகை ‘காலனீய அடிமை முறையின் நீட்சியாக – கொஞ்சமும் வெட்கமின்றி சிம்ஃபனி அமைத்ததை சாதனையாகப் பீற்றிக் கொள்கிறார்கள்’ என்று கூறுகிறது. அதாவது ஒரு பார்ப்பனன் இதே வேலையைச் செய்திருந்தால் – அடேயப்பாவாகி இருக்கும். எவனாவது ‘இது காலனிய அடிமை இல்லீங்களா?’ என்று அப்போது கேட்டுப் பார்க்க வேண்டும்! ‘எந்தக் காலனி? இது சுதந்திர உலகம். நான் சுதந்திர இந்தியன், சுதந்திர மனிதன். இது இசை. இதனை நான் ஆட்சிகொண்டு உயிர்மூச்சாக வெளியிடுகிறேன் இதெல்லாம் உணக்க எப்படிடா புரியும், அபிஷ்டு? உன்கூடப் பேசினதுக்கே நான் இப்ப ஸ்நானம் ‘பண்ணனும்’ என்று வரும் பதில்!
Photo
ஆனால் இதேவகைச் சிறு பத்திரிகைகளில் தலித் அரசியல் பாராட்டப்படுகிறது. ஏனெனில் அதைப் பாராட்டுவது லாபகரமானது. ஒரு தலித் எழுத்தாளன், இளையராஜா போல் மேனாட்டில் பிரசுரமாகி பெருமை பெறுவதை இந்த மனோபாவம் தாங்கிக்கொள்ளாது. அதாவது நம்பளுக்குக் கீழே தான் அவன் இருக்கணும். அவன் இப்ப எகிற்ரானா? அதை நம்ப யூஸ் பண்ணிக்கணும் என்ற மனோபாவமே இது.

இவர்களிடம் இந்திய அரசியல் சாசனத்தை அளித்த மேதை ஒரு ‘பறையர்’ என்பதைச் சொன்னால்? அதுவும், மிகக் கொடுமையான விதத்தில் சாதீயவாதிகளான உயர்மட்டக் கொசுமூளைகளினால் நடத்தப்பட்ட இளம் அனுபவங்களைக் கொண்ட ஒருவர் அவர் என்றால்? இவ்விடத்தில் நாம் இந்த ஒருவரான அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலில் கசப்பு இருப்பதாக காந்தி குறிப்பிட்ட இன்றைய விபரங்களைக் காண வேண்டும். காந்தியின் ‘இமாலயத் தவறு’ அப்போது ‘பளிச்’ என்று தெரியும்! ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதை: நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் விடியவேயில்லை.

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)