Wednesday, August 2, 2017

தஞ்சாவூர் நகரம் பற்றிய பழைய நினைவுகள்

1950, 60 களில் .
Photoஇங்கு நீங்கள் காண்கின்ற புகைப்படம் பழைய தஞ்சை நகரத்தில் இருந்த பழம்பெரும் திரைப்படக் கொட்டகை, பெயர் “டவர் டாக்கீஸ்” (இப்போதைய ஆனந்தம் சில்க்ஸ், ஞானம் ஓட்டல் இருக்குமிடத்தில் இருந்தது). இந்தப் படம் 1952இல் எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் தஞ்சையைத் தாக்கியது. நமது இந்த டவர் டாக்கீஸ் பலத்த சேதத்துக்குள்ளாயிற்று. புயல் சேதங்களைச் சரிசெய்து, புதுப்பித்துக் கட்டிய அந்த திரையரங்கத்துக்கு “ஞானம் டாக்கீஸ்” என்று பெயரிடப்பட்டது.

அந்த நாள் நினைவுகளில் மூழ்கியிருக்கும் வேளையில் . . . . . அப்போதெல்லாம் சுமார் பத்து பன்னிரெண்டு கார்கள் மட்டுமே தஞ்சாவூரில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தஞ்சை நகரம் சுத்தத்துக்குப் பெயர் போன சிறிய நகரம். இந்த ஊரில் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் ஒருசில மட்டுமே இருந்தன என்பதை பழைய தஞ்சை வாசிகள் அறிவார்கள். உங்கள் இல்லத்தில் வயதில் மூத்தவர்கள் இருப்பார்களானால் அவர்களிடம் இந்த கட்டுரையின் விவரங்களைப் படித்துக் காட்டுங்கள்; அவர்கள் இந்த செய்திகளை மகிழ்ச்சியோடு கேட்டு ரசிப்பார்கள். அவர்கள் இதில் காணப்படும் விவரங்களைத் தவிர தஞ்சாவூரில் இருந்த வேறு ஏதேனும் புதிய செய்திகளை நினைவுபடுத்திச் சொல்வார்களானால் அவற்றை பதிவு செய்து இதன் பின்னூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1950, 60ஆம் ஆண்டுகளுக்கு இப்போது பிந்நோக்கிச் செல்வோம்: தஞ்சை, மிக அழகான அமைதியான சிறிய நகரம். . . . . . .

திரையரங்குகள்: (திரைப்படக் கொட்டகைகள்)
1. ஞானம் டாக்கீஸ். (முதலில் டவர் டாக்கீஸ் என்று வழங்கப்பட்ட பிரபலமான திரையரங்கம். 1952க்குப் பிறகு ஞானம் டாக்கீஸ் என்று நாமகரணம் சூட்டப்பட்டது.
2. கிருஷ்ணா டாக்கீஸ் (இளைய வாண்டையார் பங்களாவுக்கு தென்புறம்– வடக்கு வாசல் பகுதியில் AYA நாடார் சாலையில் அமைந்தது).
3. நியு டவர் டாக்கீஸ் (இப்போது இது ஜூபிடர் டாக்கீஸ்)
4. யாகப்பா டாக்கீஸ் (புதாற்றுக் கரையருகில் அமைந்தது)
5. மேற்கண்ட நிரந்தர அரங்குகள் தவிர டூரிங் டாக்கீஸ் சில இருந்தன. அவை.
1. ராஜாராம் டூரிங் டாக்கீஸ் (இது ஜபமாலைபுரத்தில் சோழன் டிரான்ஸ்பொர்ட், குப்பைகள் சேகரிக்கும் பகுதிக்கருகில் இருந்தது)
2. சேம்பியன் டூரிங் டாக்கீஸ். இது பர்மா காலனி, பூக்கார விளார் சாலையில் இப்போதைய காசி மகால் கல்யாண மண்டபம் )

தஞ்சாவூரில் இருந்த சிறந்த மரக்கறி (சைவ) உணவகங்கள்:
1. மங்களாம்பிகா லாட்ஜ் (இப்போது வெங்கடா லாட்ஜ் இருக்குமிடம்)
2. ஆனந்தா லாட்ஜ் (ரயில்வே நிலையம் அருகில் இப்போதைய ஆனந்த பவன் இருக்குமிடத்தில் இருந்தது – தில்லானா மோகனாம்பாளில் சவடால் வைத்தி சிவாஜி கணேசனை இந்த ஓட்டலுக்குப் போகலாம் என்பார்)
3. சரவண பவன் (இப்போதைய காஃபி பேலஸ், எல்லையம்மான் கோயில் தெருவில் உள்ளது. இதன் உரிமையாளர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்த உணவகத்தையும் நடத்தி வந்தார். தஞ்சை IRR எனப்படும் அந்த உணவகமும் பிரபலமானது.)

தஞ்சாவூரில் இருந்த அசைவ உணவகங்கள்.
1. ராணி ஓட்டல் (இந்த உணவகம் தஞ்சாவூர் முன்னாள் தஞ்சை நகர் மன்ற தலைவர் திருமதி தேன்மோழி அவர்களது கணவர் திரு ஜெயபால் அவர்களின் தந்தையார் திரு 'தி.க.' ராஜகோபால் அவர்களுடையது. இப்போது அந்த இடத்தில் ஒரு மளிகைக் கடையும், ஏ.என்.எம். மருந்துக் கடையும் இருக்கின்றன)
2. முனியாண்டவர் விலாஸ் (பழைய பேருந்து நிலையம் அருகில்) இப்போது பாம்பே ஸ்வீட் ஸ்டால் இருக்குமிடத்துக்கும் பின்புறம்.
3. இந்தோ சிலோன் ஓட்டல் (பழைய பேருந்து நிலையம் அருகில்) இப்போது லக்கி சில்க்ஸ் இருக்குமிடம்.

இனிப்பு விற்பனையகங்கள்.
1. சூர்யா ஸ்வீட் ஸ்டால் (இப்போதைய அண்ணா சிலயருகில் வாசன் மெடிக்கல் ஸ்டோர் இருக்கிமிடத்தில்)
2. பம்பாய் ஸ்வீட் ஸ்டால் (ரயில் நிலையம் அருகில் இப்போதும் இருக்கிறது - பாம்பே ஸ்வீட் ஸ்டால்).

ஜெனரல் ஸ்டோர்ஸ்.
1. சத்தார்ஸ் ஜெனரல் ஸ்டோர்ஸ் (இப்போது சத்தார் ரெஸ்டாரெண்ட் இருக்குமிடமும் அதற்கு அடுத்த கடையும்)
2. A.Y.A.நாடார் ஜெனரல் ஸ்டோர்ஸ். (ரயில் நிலையம் அருகில், வேணுகோபால் நாயுடு மலர்மாலைக் கடைக்கருகில்)
3. இக்பால் ஸ்டோர்ஸ் (அண்ணா சிலையருகில் வாசான் மெடிகல் அருகில்)
4. இஸ்மாயில் ஸ்டோர்ஸ் (ரயில் நிலையம் அருகில் ஸ்டேட் மெடிகல் அருகில், பின்னர் ஜேபீ ஸ்டோர் வந்தது)
5. சாந்தி ஸ்டோர் (இப்போது இருக்குமிடம் தான், இது முன்னாள் அமைச்சர் திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்களுடையது)

ரொட்டிக் கடைகள்.
1. சிலோன் தாசன் பேக்கரி
2. அய்யன்கடை பேக்கரி

ஜவுளிக் கடைகள்.
1. கமலா ஸ்டோர்ஸ், தெற்கு வீதி, தஞ்சாவூர் (இப்போதும் இருக்கிறது)
2. நடராஜா ஸ்டோர்ஸ், கீழவாசல் (இப்போதும் பல கிளைகளுடன் இருக்கிறது)
3. மகாராஜா சில்க் ஹவுஸ் 1969ஆம் ஆண்டில் நடிகர் ஜெமினி கணேசன் அவர்களால் , பரிசுத்த நாடார் தலைமையில் திறப்பு விழா நடந்தது.

தையல் கடைகள்..
1. உத்திராபதி டைலர்ஸ் (கீழ வீதியில் கணேஷ் லாட்ஜ் எதிர்ப்புறம்)
2. பிரகாஷ் டைலர்ஸ் (ரயில் நிலையம் எதிரில் கணேஷ் ஓட்டல் அருகில்)
3. ப்ரான்கோ டைலர்ஸ் (ரயில் நிலையம் அருகில்)

வெற்றிலை பாக்குக் கடைகள்.
1. வண்ணாத்தி புருஷன் கடை (ரயில் நிலையம் எதிரில்)
2. ஒத்தைக் கடை (கணபதி கடை) மேரீஸ் கார்னர், இப்போது புதிய மேம்பாலத்துக்காக இடிக்கப்பட்ட தீன் காம்ப்லெஸ் இடம் .

மருந்துக் கடைகள்.
1. தஞ்சாவூர் ஃபார்மசி (காந்திஜி சாலையில் மகாராஜா, விஜய் சிலக் இருக்குமிடத்தில் – கண் ஆஸ்பத்திரி எதிரில்)
2. குமரன் & கம்பெனி. (இப்போதைய குமரன் & கம்பெனி அருகில்)

பழக்கடைகள்.
1. நாராயணசாமி பிள்ளை பழக்கடை (ரயில் நிலையம் எதிரில் சாந்தி ஸ்டோர் அருகில். திரு நாராயணசாமி பிள்ளை இப்போதைய பிரபல மருத்துவர் டாக்டர் மோகன்தாஸ் அவர்களின் தந்தையார்).

பேருந்து சர்வீஸ்.
1. எஸ்.எம்.டி. (ஸ்வாமி மோட்டார் டிரேட்ஸ். வடக்கு வாசலில் AYS நாடார் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் இவர்கள் பணிமனை இருந்தது)
2. டி.எம்.டி. (தஞ்சாவூர் மோட்டார் டிரேட்ஸ், ஆரோக்கியசாமி வாண்டயார் உரிமையாளர். இவர் சில்வர் ஆரோ திரு ஜோசப்ராஜின் தந்தையார். இப்போது இந்த இடத்தில் அட்லஸ் சைக்கிள் ஷோ ரூம், கீழ்ப்பாலம் அருகில் உள்ளது.)
3. ராமன் & ராமன் (இதன் தலைமையகம் கும்பகோணம். இப்போது காந்திஜி சாலையில் இருக்கும் எல்.ஐ.சி. கட்டடம் இருக்குமிடத்தில் இவர்கள் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். (ராமன் & ராமன் நிறுவனத்தின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் சர்வீஸ், பெட்ரோல் பங்க்கும் இருந்தது, இப்போதுள்ள ராணி பேரடைஸ் குருப்புக்குச் சொந்தமான இடத்தில் இருந்தது )
4. எஸ்.ஆர்.வி.எஸ். (இதன் தலைமையகமும் கும்பகோணம்)
5. டி.வி.எஸ். (இதன் சர்வீஸ் நிலையம் இப்போது சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட் அருகில் நாஞ்சிக்கோட்டை சாலை திருப்பத்தில் இருந்தது)
6. துவாரகா டிரான்ஸ்போர்ட்ஸ். (இப்போதைய ஃபிலோமினா மால் அருகில் இருந்தது. இப்போதும் சிதம்பர விலாஸ், லக்ஷ்மி டிரான்ஸ்போர்ட்ஸ், மகாலக்ஷ்மி டிரான்ஸ்போர்ட்ஸ் எனும் பெயர்களில் இவர்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கம் ஓட்டல் வகையாறாக்களால் நடத்தப்படுபவை.)
7. சக்தி விலாஸ். (இவர்களது அலுவலகம், வீடு ஆகியவைகள் இப்போதைய கிருஷ்ண பவன் இருக்குமிடத்தில் இருந்தது)

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்
1.வேணுகோபால் நாயுடு 'பர்மா ஷெல்' பங்க் (தற்போது டீ. பி. ஸ். பங்க்)
2, நாடிமுத்து பிள்ளை 'கால்டெக்ஸ் பங்க்' (தற்போது பி. எல். எ. பங்க்)

தகவல்: S.P.அந்தோணிசாமி, தஞ்சாவூர்.
மொழி பெயர்ப்பு: திரு. V. கோபாலன். Gopalan Venkataraman (English to Tamil)

குறிப்பு: இது நிறைவு அல்ல. . . . . பாகம் இரண்டு தொடரும் !!

++++++++++++++++
Selvaraj Nayakkavadiyar added: "நாடகக் கொட்டகை... ராமனாதன் செட்டியார் ஹால் என்ற சுதர்சன சபா....தெற்கு வீதி மேலவீதி சந்திப்பில் குமரகான சபா...கிருஷ்ணா டாக்கீஸ் பழைய பெயர் கிருஷ்ண கான சபா....கிந்தனார் ஸ்டுடியோ..CPS ...நவகோடி ஸ்டுடியோ... குபேரா ஸ்டுடியோ... நேஷனல் ஸ்டுடியோ.... இன்றுCPS National மட்டுமே இருக்கு...பள்ளிகளில்.... பீட்டர்ஸ்...பிளேக்... அந்தோணியார்... கல்யாண சுந்தரம்... வீர ராகவா..உமா மகேஸ்வரம்....கான்வென்ட்...Girls christian...பழைய பஸ் ஸ்டான்ட்...பழைய இடம் ரயில்வே ஸ்டேஷன் ஒட்டி வடபுறம்... Coal gas ல் ஓடிய அஞ்சா று பஸ்கள்...தங்கள் தாத்தா டைரக்டராக இருந்த merchants bank... Thanjavur permanente bank..நிக்கல்ஸன் பேங்க்.. இன்னும் பல அத்யாயங்கள் இருக்கு சார். நம்ம என்ஜினியர் கோவிந்தராஜ் சார் கிட்டே நிறைய பழைய கதை இருக்கு.....நீங்கள் ஒரு தஞ்சாவூர் தகவல் சுரங்கம் சார்....ஒரு புத்தகம் வெளியிட்டால் இளைய தலைமுறை பயன் பெறலாம்.."

+++++++++
Gopalan Venkataraman adds: "இப்போதுள்ள பழைய பேருந்து நிலையம், அரசு டிரான்ஸ்போர்ட், ஸ்டேட் வங்கி, மத்திய நூலகம் இவை யாவும் கோட்டையின் அகழியாக இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் திருவையாறு பேருந்து நிலையமும், நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் பின்புறமுள்ள நீண்ட நெடும் அகழி. முன்பெல்லாம் ரயில் நிலையத்திலிருந்து நகரத்தினுள் நுழைய காலையில் வெளிச்சம் வரும்வரை காத்திருப்பார்கள். நான்கு மணிக்கு வரும் போட் மெயிலில் இறங்கி ஆனந்தா லாட்ஜின் பின்புறம் பெரிய தொட்டியில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரில் பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டு, அங்கு காஃபி அருந்திய பின் மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவர். இப்போது பழைய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள காவல்துறை பூத் வாசலில் ஒரு பாலம் உண்டு, அதைத் தாண்டித்தான் அலங்கத்தினுள் நுழைய வேண்டும். அப்போதெல்லாம் பேருந்து நிலையம் ஜங்ஷன் அருகிலுள்ள கீழ்ப்பாலத்தின் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் இருக்கிறதல்லவா அந்த இடத்தில் இருந்தது. ஐயனார்,எஸ்.டி.லிங்கம், போன்ற பஸ்கள் பட்டுக்கோட்டைக்குச் செல்லும்..."

***********************************************
Dawood Kuthub wrote: " . . . . you forgot to mention about Siva Chidambaram,Thangavel chettiyar, Arani chettiyar,Punniyamurthi pillai,Gurusamy chettiyar, Abdul Rahim perfumes,Ramavilas tobacco,Dr.Ramanathan, the list goes on..."
***********************************************
Original Article in English:

Yester Years . . . Thanjavur Town - Thanjavur in the 1950’s & 60’s . . . A Nostalgia

This is an old photograph of the oldest theatre in Thanjavur - TOWER TALKIES (Present Gnanam Hotel & Anantham Silks). This picture was taken in 1952. At that time a severe cyclone struck Tanjore. This TOWER TALKIES suffered heavy cyclone damage. This theatre was repaired and renamed as GNANAM TALKIES.
(Photo Courtesy: Parisutha Nadar Family).

It is really wonderful to recall the good old days when there were hardly 10 or 12 cars in Thanjavur. The town was small and neat. It had a handful of reputed establishments that is remembered by old timers. Please read this article to persons of older generations in your homes .... they will surely enjoy it. If any thing has been left out get details from them and update in comments column .....

Here we go back to the 1950's & 60's .... Thanjavur as a cozy little town ....

Theatres ( Talkies)
1. Gnanam Talkies (Formerly this was called TOWER CINEMA. After 1952 it was called GNANAM TALKIES.
2. Krishna Talkies (South of Junior Vandayar Bunglow on AYA Nadra Road at Vadukku Vasal area)
3. New Tower Talkies ( Present Jupiter Theatre)
4. Yagappa Talkies.
5. Apart from this we had two touring theatres or temporary theatres – RAJARAM Touring Talkies at Jebamalaipuram, near present CRC Shed and waste Dump yard.
6. CHAMPION TOURING TALKIES at Burma Colony, Pookara Vilar Road- now Kasi Mahal Kalyana Mandapam.

Vegetarian Hotels –
1. The “Mangalambika Lodge” (Now Vekata Lodge location) ,
2. Ananda Lodge (Present Anand Bhavan location),
3. Saravana Bhavan (Iyyan Kadai Street cutting). Saravana Bhavan Iyer also was the catering contractor inside Thanjavur Railway junction .. this was also a very popular vegetarian restaurant)

Non Vegetarian Hotels
1. Rani Hotel (this place was run by Sri “Theeka” Rajagopal father of our former Chariman’ husband, Sri Jayapal. Now a Maligai Shop and ANM Medicals is located here)
2. Muniandavar Vilas near New Bus Stand ( This was located just behind where the Bombay Sweet Stall is now located)
3. Indo Cylon Hotel naar old Bus Stand (now occupied by Lucky Silks)

Sweet Stalls
1.Surya Sweet Stall ( Where Vasan Medicals is located near Anna Statue)
2. Bombai Sweet Stall (present Bombay Sweet Stall near Railway Station0

General Stores
1.Sathars General Stores (Now Sathars Restaurant and adjacent shop)
2. A.Y.A. Nadar General stores ( Near railway station next to garland shop)
3.Iqbal Stores (next to Vasan Medicals near Anna statue)
4.Ismail Stores (near railways station next to State Medicals. Later Jaybee stores occupied this place)
5.Shanthi Store ( same as now. Owned by former Minister SNM Ubayadullah)

Bakery
1.Ceylon Dasan bakery
2. Ayyankadai Bakery

Cloth Merchants
1. Kamala Stores, South Main Street.
2. Nataraja Stores, Keelavasal

Tailors
1. Uthirapathy Tailors (Opposite Ganesh Lodge in East Main Street)
2. Prakash Tailors (Near Railway station next to Ganesh Hotel)
3. Franco Tailors (near railway Station)

Vethalai Paaku shops
1.Vannathi Purusan Kadai (Near railway station)
2.Oththa Kadai or Ganapathy Kadai in Mary’s Corner (now Deen Complex)

Medical shops
1.Thanjavur pharmacy (now Vijay Silk stores next to Maharaja)
2.Kumaran & Co (Close to present Kumaran & Co)

Fruit Stalls
Narayanasamy Pazha Kadai (situated close to Shanthi Store near railway station. Sri Narayanasamy Pillai is the father of Dr. Mohandas, Urologist).

Bus Services
1. S.M.T. (Swamy Motor Trades – The workshop Building was situated in Vadukka vassal area on AYA Nadar Road)
2. T.M.T. (Tanjore Motor Trades. Operated by Arokiasamy Vandayar, father of Josephraj of Silver Arrow Service. Then office now occupied by ATLAS Cycle showroom near Low Bridge)
3. Raman & Raman ( with Head Office at Kumbakonam. They had their private bus stop at the place occupied by the LIC building. They also had a Hindustan Motors Service Station and Petrol Bunk which is owned by the present Ranee Paradise Group )
4. S.R.V.S. ( Head Quarters – Kumbakonam)
5. T.V.S. ( Had their service station at present TARI workshop next to Sacred Heart Convent)
6. Dwaraka Transports. ( Their Office was located in the present PHILOMINA MALL. This transport Service still runs under different names – Chidambara Vilas, Lakshmi Transports, Mahalaxmi Transports. It is owned by SANGAM HOTEL group)
7. Shakthi Vilas ( Their Office and residence is now converted to KRISHNA BHAVAN Hotel on Trichy Road)

Petrol Bunks
1. Venugopal Naidu 'Burmah Shell' Bunk ( Now D.Balasubramaniam Bunk at Low Bridge)
2. Nadimuthu Pillai 'Caltex' Bunk - now PLA bunk.
****
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)