Wednesday, August 2, 2017

பல்நோக்கு திட்டம் கொண்ட பிரமாண்ட அணை

குஜராத் மாநிலத்தில் ஸௌராஷ்ட்ரா பகுதிகளில் இருந்து நர்மதா, தாதர், மாஹி, சபர்மதி, மற்றும் ஏராளமான சிறிய ஆறுகளில் இருந்து ஆண்டுக்கு 1700 கியுபிக் மீட்டர் நீர் அரபிக்கடலில் காம்பே வளைகுடா எனப்படும் இந்த குறுகலான நீர் சந்தியில் வீணாக கடலில் கலந்துகொண்டு இருக்கின்றது.

இதனை தடுத்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தும்விதமாக கடலுக்குள் 35 கி.மீ. நீள பிரம்மாண்டமான உலகிலேயே மிகப்பெரிய அணையை 50 ஆயிரம் கோடி செலவில் அமைக்க குஜராத் அரசு திட்டம் வகுத்துள்ளது.
கடல் நீர் உள்ளே வராமல் நல்ல தண்ணீர் இதில் சேமிக்கப்படுவதால் ஒரு சில வருடங்களில் இந்த அணை முழுவதுமே நல்ல தண்ணீராக மாறிவிடும். இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டால் இதில் 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் நீரை சேமிக்கலாம். அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளிலும் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் இதன் நீரின் இருப்பு அதிகமாக இருக்கும்.
Photo"கல்பசார்' என்ற பெயரில் கட்டப்பட இருக்கும் பல்நோக்கு திட்டம் கொண்ட பிரமாண்ட அணையின் நீளம் 35 கி.மீ., ஆகும். பவநகரையும் சூரத் நகரையும் இணைக்கும் வகையில் அணையை யொட்டி 10 வழிச்சாலையும், சாலை நெடுகிலும் காற்றாலை மற்றும் சூரிய மின்சார பேனல்களும் ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன. இந்த இரு நகரங்களுக்கு இடையே சாலை மற்றும் ரயில் வழியாக தற்போதுள்ள தூரம் 350 கி.மீ., ஆகும். இந்த அணை அமைக்கப்பட்டால் பவநகர் - சூரத் இடையே உள்ள தூரம் 150 கி.மீ.,யாக அமையும். 200 கி.மீ., தூரம் குறைகிறது. இதனால் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பவநகரில் இருந்து, தெற்கு குஜராத்தில் உள்ள சூரத் நகரத்திற்கு ஆமதாபாத் வழியாக சுற்றிச் செல்வது தவிர்க்கப்படும். அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்த திட்டத்தினால் குஜராத் மட்டுமல்லாமல் மஹாராஷ்ட்ரா மாநிலமும் பயன்பெறும்.

இதெல்லாம் நமக்கு எதுக்குசார், நமக்கு அந்த 10 ரூவா அம்மாத் தண்ணியும் டாஸ்மாக்கும் இருக்கே அது போதாதா என்கிறீர்களா?


குஜராத் நரேந்திர மோடியின் அசரவைக்கும் நீர் மேலாண்மை
குஜராத்தில் சுமார் 200 ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட்டது. ஆனால், மோடியின் அரசு அசந்து போகவில்லை. மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது குஜராத் அரசு. அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத்.
அரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு. Animated Photo
எந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. 'இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது' என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. "Users are the best managers" என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம்.
கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'தினசரி ஒரு ரூபாய்' என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.
இதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.
'வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்' என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு 'டேங்க் நிரம்பி விட்டது' என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது.
"நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு ஒதுக்கியுள்ளோம். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்" என்று குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ஐ.ஏ.எஸ்., விவரித்தார். Photo
"பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு" – இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.
இந்த நீர் மேலாண்மையில் தமிழகம் எப்படி இருக்கிறது??
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)